/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை, இளையான்குடியில் தொடர் மழையால் பாதிப்பு
/
மானாமதுரை, இளையான்குடியில் தொடர் மழையால் பாதிப்பு
ADDED : மார் 13, 2025 05:05 AM

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடியில் 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வயல்கள் மற்றும் மண்பாண்ட தொழிற்கூடத்தில் மழைநீர் தேங்கியதால் விவசாயிகள்,தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மானாமதுரை,இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக இருந்த நிலையில் மக்கள் சிரமப்பட்டனர். 2 நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
மானாமதுரை,இளையான்குடியில் தாமதமாக நெல் விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது தான் அறுவடை செய்து வருகின்றனர். நெல்லை பாதுகாப்பாக வைக்க முடியாமலும்,நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல்மூடைகளும் தண்ணீரில் நனைந்து வருகின்றன. அறுவடை நடக்காத வயல்களில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
விஜயன்குடியில் வீடுகளுக்கு முன் மழைநீர் தேங்கி நிற்பதால் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
மானாமதுரையில் மண்பாண்ட தொழிற்கூடங்களுக்கு முன் மழைநீர் தேங்கியதை தொடர்ந்து தொழிலாளர்களும் தொழில் செய்ய முடியாமல் உள்ளனர்.