/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை கோயில் விழா நாளை சப்பர வீதியுலா
/
மானாமதுரை கோயில் விழா நாளை சப்பர வீதியுலா
ADDED : ஆக 13, 2024 11:25 PM

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் ஆடித்தபசு திருவிழாவில் நாளை சப்பர வீதி உலா நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 7 ம்தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
நேற்று இரவு 7ம் நாள் மண்டகப்படியில் அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சப்பர வீதியுலா நாளை மாலை 5:00 மணிக்கு நடைபெற உள்ளது. ஆடித்தபசு திருவிழா வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் செய்து வருகின்றனர்.

