நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை, - தேவகோட்டை பட்டுக்குருக்கள் நகர் அத்தி வராஹி அம்மன், அட்சய மகா கணபதி கோவில்கள், ஸ்வர்ண பைரவர் விக்ரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 24 நாட்கள் தினமும் ஹோமமும் தொடர்ந்து மண்டல பூஜை நடந்தன.
நிறைவு நாளன்று மண்டலாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் ஹோமம், பூஜை செய்தனர். இதனைத் தொடர்ந்து அத்தி வராஹி, அட்சய மகா கணபதி, ஸ்வர்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.