
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மக விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மன் அலங்காரங்களுடன் பல்வேறு பகுதிகளில் வீதி உலா வந்து கோயில் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்திற்கு எழுந்தருளினார். பெண்கள் தெப்பக்குளத்தை சுற்றி விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.