ADDED : மே 02, 2024 05:18 AM
சிவகங்கை: சிவகங்கை இந்திய கம்யூ., அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு கொடியேற்றுவிழா நடந்தது. மாதர் சம்மேளன மாநில தலைவர் மஞ்சுளா கொடியேற்றினார். விவசாய சங்க மாநில தலைவர் குணசேகரன், நகர் செயலாளர் மருது, மாவட்ட குழு கங்கைசேகரன், நகர் துணை செயலாளர் சகாயம் பங்கேற்றனர்.
மானாமதுரை: பாபா மெட்ரிக் பள்ளியில் மே தின விழா நடந்தது. நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். தாளாளர் கபிலன், ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி முன்னிலை வகித்தனர். முதல்வர் சாரதா விழா ஏற்பாட்டை செய்திருந்தார்.
தேவகோட்டை: தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் வ.உ.சி.,பேரவை சார்பில் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
தலைமை ஆசிரியர் தமிழ்அரிமா வரவேற்றார். பொருளாளர் ஜானகிராமன், துணை தலைவர்கள் வேலாயுதம், செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
எம்.எல்.ஏ.,க்கள் காரைக்குடி மாங்குடி, சிவகங்கை செந்தில்நாதன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ, முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன், டாக்டர் ஜெயக்குமார், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், மீரா உசேன், கம்யூ., நிர்வாகிகள் மீனாள், காமராஜ், வர்த்தக சங்க தலைவர் மகபூப் பாட்ஷா, செல்வம், ஆசிரியர் ஜவஹர், நகர் காங்., தலைவர் சஞ்சய், நகர் பா.ஜ., தலைவர் பாலகிருஷ்ணன், அ.ம.மு.க. நகர் செயலாளர் கமலக்கண்ணன், விழாக்குழு அழகய்யா, செயலாளர் ராஜ், ஸ்ரீதேவி பங்கேற்றனர்.
துணை தலைவர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

