/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வு பயிற்சி
/
மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வு பயிற்சி
ADDED : மார் 06, 2025 05:14 AM
சிவகங்கை:மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி பெற பி.எஸ்சி., எம்.எஸ்சி., நர்சிங் பட்டம், பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பொது செவிலியர் மருத்துவ படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 21 முதல் 35 க்குள் இருத்தல் அவசியம்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். இரண்டு மாதம் வழங்கப்படும் பயிற்சிக்கான தங்கும் விடுதி செலவு உள்ளிட்ட அனைத்து செலவையும் தாட்கோ ஏற்றுக்கொள்ளும். பயிற்சிக்கு பின் பல்வேறு நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் ''www.tahdco.com'' என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும், என்றார்.