/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் மினி ஆப்பிள் கிலோ ரூ.150 விற்பனை
/
மானாமதுரையில் மினி ஆப்பிள் கிலோ ரூ.150 விற்பனை
ADDED : ஆக 16, 2024 04:19 AM

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் மினி ஆப்பிள் ஒரு கிலோ ரூபாய் 150 க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை இந்த வாரம் குறைந்து விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சிக்குள்ளாகினர்.
மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்து காய்கறிகள், மளிகை சாமான்கள், துணிகள், விவசாய இடுபொருட்கள், கருவாடு, மீன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை வாங்குவதற்காக மானாமதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை இந்த வாரம் பெருமளவில் விலை குறைந்து காணப்பட்டது.
* சந்தையில் தக்காளி 4 கிலோ ரூ.100 க்கு விற்கப்பட்டது. சின்ன வெங்காயம் 3 கிலோ ரூ.100, பட்டர் பீன்ஸ், சோயா கிலோ ரூ. 160, சின்ன பாகற்காய் ரூ.200, உருளைக்கிழங்கு ரூ.50, கத்தரி ரூ.60, பீட்ரூட், கேரட், அவரை, பச்சை மிளகாய் ரூ.80, பச்ச மொச்சை ரூ.60க்கும் விற்கப்பட்டன.
இது குறித்து ஆப்பிள் வியாபாரி தினேஷ்குமார் கூறியதாவது, மழைக்காலம் ஆரம்பித்ததை தொடர்ந்து தற்போது ஆப்பிள் சீசனும் மெல்ல, மெல்ல ஆரம்பமாகி வருகிறது. தற்போது மினி ஆப்பிள் ஒரு கிலோ ரூ.150க்கு விற்கப்படுகிறது, என்றார்.
//