/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் மினி பஸ் டிரைவர் கண்டக்டர் கட்டையுடன் மோதல்
/
காரைக்குடியில் மினி பஸ் டிரைவர் கண்டக்டர் கட்டையுடன் மோதல்
காரைக்குடியில் மினி பஸ் டிரைவர் கண்டக்டர் கட்டையுடன் மோதல்
காரைக்குடியில் மினி பஸ் டிரைவர் கண்டக்டர் கட்டையுடன் மோதல்
ADDED : ஆக 05, 2024 07:03 AM

காரைக்குடி : காரைக்குடியில் தனியார் மினி பஸ்களை இயக்குவதில், கண்டக்டர், டிரைவர்களுக்குள் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், உருட்டு கட்டையுடன் மோதும் நிலைக்கு சென்றுள்ளனர்.
காரைக்குடியில் இருந்து கோட்டையூர், அரியக்குடி, புதுவயல், கானாடுகாத்தான், நேமத்தான்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மினி பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, உரிய வழித்தடம், நேரத்திற்குள் அவற்றை இயக்குவதில்லை.
இதன் காரணமாக பயணிகளை ஏற்றுவதில் மினி பஸ் கண்டக்டர், டிரைவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு நிலவி வந்தது. நேற்று அரியக்குடியில் இருந்து புறப்பட்ட மினி பஸ் அதற்குரிய வழித்தடத்தில் செல்லாமல் ஈ.வெ.ரா., சிலை அருகே டி.டி., நகர், சர்ச் முதல் வீதி வழியாக வந்துள்ளது.
இதை கண்டித்து மற்றொரு மினி பஸ் டிரைவர் கண்டக்டர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனால், கண்டக்டர், டிரைவர்கள் கையில் உருட்டு கட்டைகளுடன் தகராறில் ஈடுபட்டதால், பயணிகள் அச்சம் அடைந்தனர்.
இது குறித்த அறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் உருட்டு கட்டைகளுடன் நின்ற டிரைவர், கண்டக்டர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.