/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரையூர், மாங்குளத்தில் 'மினி ஸ்டேடியம்' தலா ரூ.3 கோடியில் திட்டம்
/
காரையூர், மாங்குளத்தில் 'மினி ஸ்டேடியம்' தலா ரூ.3 கோடியில் திட்டம்
காரையூர், மாங்குளத்தில் 'மினி ஸ்டேடியம்' தலா ரூ.3 கோடியில் திட்டம்
காரையூர், மாங்குளத்தில் 'மினி ஸ்டேடியம்' தலா ரூ.3 கோடியில் திட்டம்
ADDED : மே 14, 2024 12:13 AM
சிவகங்கை: காரைக்குடியை தொடர்ந்து திருப்புத்துார், மானாமதுரையில் தலா ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின், தொகுதிக்கு 10 கோரிக்கை விதம் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்களிடம் மனுக்களை பெற்றார். அதில், அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.,க்களும் மினி ஸ்டேடியம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சிவகங்கையில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு திடல் நீச்சல் குளத்துடன்இருப்பதால், மற்ற 4 தொகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்தது.
தொகுதிக்கு தலா ரூ.3 கோடி செலவில் மினி ஸ்டேடியம் கட்டித்தரப்படும் என அரசு தெரிவித்தது. அந்த வகையில், காரைக்குடி தொகுதிக்கு கழனிவாசலில் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி செலவில் மினி ஸ்டேடியம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
நிலம் கையகம்படுத்தும் பணி
இதற்கு அடுத்தபடியாக திருப்புத்துார் தொகுதியில் காரையூர், மானாமதுரை தொகுதியில் மாங்குளம் ஆகிய இரு இடங்களில் மினி ஸ்டேடியம் கட்ட இடம் தேர்வு செய்தனர். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.
வருவாய்துறையிடம்இருந்து மாவட்ட விளையாட்டு ஆணையத்திடம் நிலங்களை ஒப்படைத்த பின், மினி ஸ்டேடியத்திற்கான கட்டுமான பணி துவங்கும். இங்கு 400 மீ., ஓடுதளம், வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, கோ- கோ, கபடி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கானகட்டுமான வசதிகள் செய்யப்படும்.

