/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதியின் புதிய யுக்தி: அதிகாரிகள் கலக்கம்
/
சிவகங்கை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதியின் புதிய யுக்தி: அதிகாரிகள் கலக்கம்
சிவகங்கை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதியின் புதிய யுக்தி: அதிகாரிகள் கலக்கம்
சிவகங்கை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதியின் புதிய யுக்தி: அதிகாரிகள் கலக்கம்
ADDED : செப் 11, 2024 12:17 AM

சிவகங்கை, : சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி நடத்திய அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் புதிய யுக்தியை கடைபிடித்ததால் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
அமைச்சர்கள் உதயநிதி, பெரியகருப்பன் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், முதல்வரின் முகவரி திட்டம் மூலம் வந்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகளிடம் விசாரித்தார்.
அப்போது திருப்புத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பொது இடத்தில் மண்டியுள்ள புதர்களை அகற்றுமாறு விடுத்த மனுவிற்கு, பி.டி.ஓ., ஒருவரிடம் கேள்வி எழுப்பினார். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
அப்போது அமைச்சர் உதயநிதி பி.ஏ., ஒருவர் உடனே மனுதாரர் அலைபேசி எண்ணுக்கு அழைத்து, அமைச்சரிடம் பேசக்கொடுத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி, உங்கள் மனு மீதான தீர்வு எடுத்துள்ளார்களா என கேட்டார். அவர் இல்லை என கூறவே, மீண்டும் அந்த பி.டி.ஓ.,விடம் கேட்டபின், அதிகாரிகள் சமாளித்துள்ளனர். இதற்கு அடுத்து, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் பிளான் அப்ரூவல் கேட்டு விண்ணப்பம் குறித்து கேட்டார். அதற்கு விண்ணப்பதாரர் உடல்நிலை பாதித்து உள்ளதால், ஆன்லைனில் அவரை நேரடியாக விண்ணப்பிக்க கூறியுள்ளேன் என பி.டி.ஓ., பதில் அளித்தார்.
அந்த மனுதாரரின் அலைபேசி எண்ணிற்கும் அமைச்சர் உதயநிதி நேரடியாக பேசி, உடல்நலம் விசாரித்து உண்மை நிலையை அறிந்து கொண்டார்.
அதே போன்று பொதுப்பணித்துறையிடம் வழங்கும் மனுவிற்கு 4 சதவீதம் மட்டுமே பதில் அளித்துள்ளீர்கள் என கேட்டார். அப்போது பெரும்பாலும் கண்மாய் துார்வாருதல், மடை சீரமைத்தல் கோரி தான் மனு வந்துள்ளது.
அதற்கான நிதி ஒதுக்கீடு வர வேண்டும் என பதில் அளித்துள்ளனர். இது போன்று அமைச்சர் உதயநிதி மனுதாரரிடம் நேரடியாக பேசி விசாரித்ததால், கூட்ட அரங்கில் இருந்து அனைத்து துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடத்திய ஆய்விற்கு பின் 4 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதே நிலை சிவகங்கை மாவட்டத்திலும் ஏற்படுமோ என அதிகாரிகள் கலக்கம் அடைவதாக தெரிவித்தனர்.

