ADDED : மே 18, 2024 05:09 AM
இளையான்குடி, : இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் முஹம்மது சலீம் தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது ஆலோசனை வழங்கினார்.
இளையான்குடியில் வார்டு வாரியாக கிளைகள் அமைப்பது, ஆம்புலன்ஸ் சேவையை சிறப்பாக செயல்படுவதற்கு புதிய பொறுப்பாளரை நியமிப்பது.புறவழிச் சாலையில் சோலார் மின் விளக்குகளை முழுமையாக பொறுத்த பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
கூட்டத்தில் தலைவர் பசீர் அஹமது, மாநில துணைச் செயலாளர் மண்ணிவாக்கம் யூசுப், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட செயலாளர் அஹமது சிராஜூதீன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளர் முஹமது அஸாருதீன், நகர பொருளாளர் உஸ்மான், துணைச் செயலாளர்கள் மஹ்பூப், முஹம்மது தீன், ஜமால், அன்வர், மற்றும் கிளை,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

