/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடர்ந்து அழுத குழந்தையை கொலை செய்து தாய் தற்கொலை
/
தொடர்ந்து அழுத குழந்தையை கொலை செய்து தாய் தற்கொலை
ADDED : ஜூன் 02, 2024 02:23 AM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தவத்தாரேந்தல் வலையப்பட்டியை சேர்ந்தவர் முருகன், 38; வேலி அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அழகுமீனாள், 34. இவர்களுக்கு 2020ல் திருமணம் நடந்தது. ஆறு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. நான்கு நாட்களாக குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.
முருகனின் தந்தை இயந்திரத்தால் மரம் அறுக்கும் தொழில் செய்து வருவதால், வீட்டில் எப்போதும் கேனில் பெட்ரோல் இருக்கும். நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு அழகுமீனாள் பெட்ரோல் கேனுடன் வீட்டின் பின்புற கண்மாய்க்கு சென்று குழந்தை மீதும், தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
கிராம மக்கள் தீயை அணைத்து திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்தது. அழகுமீனாள் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.