/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வழிகாட்டி பலகை இல்லாமல் தவிக்கும் வாகன ஓட்டிகள்
/
வழிகாட்டி பலகை இல்லாமல் தவிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 12, 2024 04:42 AM
எஸ்.புதுார்: சிங்கம்புணரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை இல்லாமல் வாகன ஒட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இத்தாலுகாவில் எஸ்.புதுார் ஒன்றியம் புழுதிபட்டி வழியாக மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில் இருந்து எஸ்.புதுார், பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல புழுதிபட்டி விலக்கில் வாகனங்கள் திரும்ப வேண்டும். மாவட்டங்களை இணைக்கும் முக்கிய விலக்கு ரோடாக இது இருப்பதால் தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இவ்வழியாகத்தான் செல்கின்றன.
கொட்டாம்பட்டியில் இருந்து புழுதிபட்டி வரை பல விலக்கு ரோடு இருக்கும் நிலையில் முக்கிய இடங்களில் ஊர் பெயர் பலகை மட்டுமில்லாமல் வழிகாட்டி பலகையும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் பல கி.மீ., தூரம் சென்று திரும்பி வீண் அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே இச்சாலையில், குறிப்பாக புழுதிபட்டி விலக்கில் எஸ்.புதுார், பொன்னமராவதி செல்லும் வழியை குறிப்பிட்டு வழிகாட்டி பலகை அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

