/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சர்வீஸ் ரோட்டில் குப்பை எரிப்பு தவித்த வாகன ஓட்டிகள்
/
சர்வீஸ் ரோட்டில் குப்பை எரிப்பு தவித்த வாகன ஓட்டிகள்
சர்வீஸ் ரோட்டில் குப்பை எரிப்பு தவித்த வாகன ஓட்டிகள்
சர்வீஸ் ரோட்டில் குப்பை எரிப்பு தவித்த வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 16, 2024 05:01 AM

திருப்புவனம்: திருப்புவனம் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் குப்பையை கொட்டி தீ வைத்ததால் நேற்று நாள் முழுவதும் வாகன ஒட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
திருப்புவனத்தில் நான்கு வழிச்சாலையை ஒட்டி நகருக்குள் வாகனங்கள் சென்று வருவதற்கு சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் ரோட்டின் ஒருபகுதி நான்கு வழிச்சாலைக்கும் மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதைக்கும் இடையே அமைந்துள்ளது. இந்த இடத்தில் திருப்புவனம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை 200 மீட்டர் துாரத்திற்கு கொட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை தூய்மை பணியாளர்கள் குப்பைக்கு தீ வைத்துள்ளனர். ரோடே தெரியாத அளவிற்கு புகை மூட்டம் கிளம்பி வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலமுறை சாலையோரம் குப்பையை கொட்டி தீ வைப்பது குறித்து பேரூராட்சிக்கு புகார் அனுப்பியும் மீண்டும் மீண்டும் குப்பைகளுக்கு தீ வைப்பது தொடர்கதையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் சர்வீஸ் ரோட்டில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.