/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
/
போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 23, 2024 04:19 AM

மானாமதுரை: மானாமதுரையில் வாரச்சந்தையன்று ரோட்டில் கடைகளை அமைப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நகராட்சி அலுவலகம் அருகே நடைபெறும்
இங்கு கடைகளை அமைக்க வரும் வியாபாரிகளில் பெரும்பாலானோர் ரோட்டில் கடைகளை போடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாரச்சந்தை வளாகத்திற்குள் போதுமான இட வசதி இருந்தும் அங்கு கடைகளை அமைக்காமல் வியாபாரிகள் ரோட்டில் கடைகளை அமைப்பதால் வாரம்தோறும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த ரோட்டில் கடைகளை அமைக்கும் வியாபாரிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.