/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எம்.பி., தேர்தலுக்கு பின் டிரான்ஸ்பர் இல்லையா
/
எம்.பி., தேர்தலுக்கு பின் டிரான்ஸ்பர் இல்லையா
ADDED : ஜூலை 01, 2024 04:22 AM
தேவகோட்டை, : எம்.பி., தேர்தலுக்கு பின் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., போலீசார்களை பணியிடமாற்றம் செய்யவில்லை என்ற அதிருப்தியில் போலீசார் புலம்பி தவிக்கின்றனர்.
எம்.பி., தேர்தலுக்காக இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.., உட்பட போலீசார் வேறு சட்டசபை தொகுதிக்கும், லோக்சபா தொகுதிக்கும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் முடிந்த பின்னும் பழைய இடங்களுக்கு மாற்றம் செய்யவில்லை.
பிற மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து விட்டனர். ஆனால், சிவகங்கையில் மட்டுமே இன்னும் பணியிடமாற்றம் செய்யப்படாமல் உள்ளது. எனவே தேர்தல் முடிந்து பல நாட்களாகியும் பணியிட மாற்றம் செய்யாமல் உள்ள இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., போலீசாருக்கு டிரான்ஸ்பர் வழங்க வேண்டும் என புலம்பி தவிக்கின்றனர்.
குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் தேவகோட்டையில் போலீஸ் எண்ணிக்கை உரிய எண்ணிக்கையில் கூட இல்லை.
போக்குவரத்த நெருக்கடி, விபத்துக்கள் நடக்கும் இங்கு, போக்குவரத்து காவலை கண்காணிக்க இரு சிறப்பு எஸ்.ஐ., ஒரு போலீஸ் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் கடும் மன உளைச்சலில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், நாளுக்கு நாள் தேவகோட்டையில் அதிகரிக்கும் ரோட்டோர ஆக்கிரமிப்பால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
இதன் காரணமாக போலீசாருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு விடுகிறது. தேவகோட்டையில் உரிய போலீசாரை நியமிக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.