/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்கள்

ADDED : ஆக 25, 2024 04:36 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 10 பேர் எம்.பி.பி.எஸ்.,படிப்பிற்கும் ஒருவர் பி.டி.எஸ்.,படிப்பிற்கும் இந்தாண்டு தேர்வாகியுள்ளனர்.
கீழக்கண்டனி அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் படித்த வனிதா, கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி சென்னை, காயத்ரி கோயம்பத்துார்அரசு மருத்துவக் கல்லுாரி,மோகன் சிவா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி, முறையூர் அரசு மேல்நிலை பள்ளி மதன் நிருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி, அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி ராஜேஸ்வரி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி, அல்லிநகரம் தானு, திருப்புத்துார் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி லட்சுமி திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரி, கீழக்கண்டனி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி சினேகாவுக்கு திருச்சி ஸ்ரீனிவாசா மருத்துவக் கல்லுாரி,சிங்கம்புணரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சூர்யாவுக்கு மேல்மருவத்துார் ஆதிபாராசக்தி பல் மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியிலும் இடம் கிடைத்துள்ளது.