/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
/
கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
ADDED : ஜூலை 23, 2024 05:19 AM
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ஆடிமுளைப்பாரி விழாவை முன்னிட்டு நேற்று மாலை தைலக்காப்பு, சுவாமி புறப்பாடு நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில், ஜூலை 13 அன்று விதை பரப்புதலுடன் ஆடி முளைப்பாரி திருவிழா துவங்கியது. தினமும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமி வீதி உலா வந்தார். அம்மன் முன் பெண்கள் முளைப்பாரிவைத்து, கும்மியடித்து வழிபட்டனர்.
ஜூலை 21 அன்று கண்ணுடைய நாயகி அம்மன் தங்க முளைப்பாரியை தலையில் தாங்கி திருவீதி உலா வந்தார். நேற்று மாலை 6:00 மணிக்கு தைலக்காப்பு மற்றும் இரவு அம்மன் திருவீதி உலாவுடன் ஆடி முளைப்பாரி திருவிழா நிறைவு பெற்றது. தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா ஆகியோர் தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.