/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
/
திருப்புத்துார் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
திருப்புத்துார் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
திருப்புத்துார் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
ADDED : ஆக 15, 2024 04:15 AM

திருப்புத்துார் : திருப்புத்துாரில் பல பகுதிகளிலிருந்தும் ஆடி முளைப் பாரித் திருவிழாவை முன்னிட்டு அம்மனிடம் மழை வேண்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்று நீர்நிலைகளில் பாரியை கரைத்தனர்.
திருப்புத்துார் நடுத்தெரு கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிபாரி திருவிழா நடந்தது. ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை இரவு முளைப்பாரி மதுகுடங்கள் சுமந்து மறுநாள் ஊர்வலமாக சென்று சீதளி திருக்குளத்தில் கரைப்பது வழக்கம். இந்தாண்டும் காப்பு கட்டிய நாளிலிருந்து தினசரி இரவில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு பெண்கள் மதுக்குடங்களை சுமந்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று கோயிலுக்கு வந்தனர். நேற்று காலை மீண்டும் முளைப்பாரிகளை எடுத்து சென்று திருத்தளிநாதர் ஆலயம், வீரமாகாளியம்மன், பூமாயி அம்மன் கோயில்களில் வழிபாடு நடத்தி சீதளி குளத்தில் மது குடங்களை கரைத்தனர்.
திருப்புத்துார் நான்கு ரோடு பகுதியில் இசை வேளாளர் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா ஆக. 6ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சர்வ அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. ஆக. 12 மாலையில் பூமாயி அம்மன்,கோட்டை கருப்பர் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு நேற்று காலை மேளதாளத்துடன் முளைப்பாரி திருவீதி உலா கோவிலிலிருந்து புறப்பட்டது. பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று சீதளி குளத்தில் கரைத்தனர்.பின்னர் அன்னதானம் நடந்தது.
பிரபாகர் காலனி முத்துமாரியம்மன் கோயில், தென்மாப்பட்டு முத்துமாரியம்மன் கோயில்களிலிருந்தும் பெண்கள் முளைப்பாரி எடுத்து சீதளிகுளத்தில் கரைத்தனர்.