/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் முளைப்பாரி ஊர்வலம்
/
சிங்கம்புணரியில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED : ஆக 02, 2024 06:44 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஆடி அம்மன் வழிபாட்டை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு சிங்கம்புணரியில் இருந்து 2ம் ஆண்டாக பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். முன்னதாக சந்திவீரன் கூடத்தில் பெண்கள் கும்மியடித்து வழிபாடு நடத்தினர். அங்கிருந்து புறப்பட்டு சேவுகப்பெருமாள் கோயில், சதுர்வேத மங்கலம் அழகுநாச்சியம்மன் கோயில், திருக்களம்பூர், வேந்தன்பட்டி சிவன் கோயில், பொன்னமராவதி அழகு நாச்சியம்மன் கோயில்களில் வழிபாடு நடத்தப்பட்டு கொன்னையூரை அடைந்தனர்.
இன்று காலை அங்குள்ள கருப்பர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து முளைப்பாரி சாத்துகின்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.