ADDED : ஆக 01, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
பூவந்தி, ஆக.2-
பூவந்தியை சேர்ந்த செந்துாரபாண்டி மனைவி மணிமாலா 30, நேற்று காலை 10:30 மணி அளவில் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் நடந்து சென்றார்.
அப்போது இரண்டு டூவீலர்களில் வந்த நான்கு பேர் அவர் அணிந்திருந்த எட்டு பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர். மணிமாலா சங்கிலியை ஒரு கையால் பிடித்ததால், பாதி செயினுடன் டூவீலரில் வந்தவர்கள் தப்பினர்.
