நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரியில் முத்தமிழ் விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். தமிழ் ஆய்வியல் துறைத் தலைவர் பூங்குழலி வரவேற்றார். மதுரை சிவகாசி நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் அசோக் தலைமை வகித்தார். கல்லுாரி தாளாளர் சிவராம், கல்லுாரித் துணைத் தலைவர் சிவகுமார், முதல்வர் விசுமதி பேசினர். எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் மாணவமும் மா நவமும் என்ற தலைப்பில் பேசினார். மாணவியரின் தேவராட்டமும், வரலாற்று நாடகமும் நடந்தது. துறைச் செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் கார்த்திகைச் செல்வி நன்றி கூறினார்.

