/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் பிரசாரத்தை துவக்காத தேசிய கட்சிகள்
/
சிவகங்கையில் பிரசாரத்தை துவக்காத தேசிய கட்சிகள்
ADDED : மார் 30, 2024 04:38 AM
சிவகங்கை, : சிவகங்கை தொகுதியில் அ.தி.மு.க., ந.த.க.,வேட்பாளர்கள் பிரசாரத்தை துவக்கிய நிலையில் பா.ஜ.,காங்., வேட்பாளர்கள் இன்னும் சுற்றுப்பயணத்தை துவக்கவில்லை.
சிவகங்கை தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் காங்., கார்த்தி, பா.ஜ.,,கூட்டணி சார்பில் தேவநாதன், அ.தி.மு.க., சார்பில் சேவியர் தாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி போட்டியிடுகின்றனர்.
இதில் அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாசும், நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசியும் 6 எம்.எல்.ஏ.,தொகுதியிலும் நிர்வாகிகள் கூட்டம் நடத்தி அறிமுகம் செய்து முதற்கட்ட பிரசாரத்தை துவக்கி விட்டனர்.
ஆனால் தேசிய கட்சியான பா.ஜ., சார்பிலும் தி.மு.க.,கூட்டணி காங்.,சார்பிலும் இன்னும் பிரசாரத்தை துவக்கவில்லை. அ.தி.மு.க.,வேட்பாளர் சேவியர் தாஸ் முதற்கட்டமாக சிவகங்கை எம்.எல்.ஏ., தொகுதியில் பிரசாரத்தை துவக்கி கிராமம் கிராமமாக காங்.,கார்த்திக்கிற்கு எதிரான புகார்களையும், குறைகளையும் கூறி ஆதரவு திரட்டுகிறார்.
அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசியும் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க.,கூட்டணி கட்சிகளில் நிலவும் கோஷ்டி பூசலில் இதுவரை நிர்வாகிகளை சந்தித்து சமாதானம் செய்யும் வேலையில் தான் காங்., நிர்வாகிகள் சிலர் இறங்கியுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன் நடை பயிற்சி மேற்கொள்ளும் போது நடந்த விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார். வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேசிய கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தும் என்று கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

