/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்வின்போது ஒலி பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு அவசியம்; மாவட்ட மாணவர், பெற்றோர் வலியுறுத்தல்

ADDED : மார் 03, 2025 07:12 AM
திருப்புவனம்: இன்று முதல் பிளஸ் 2 தேர்வு துவங்க உள்ள நிலையில் கிராமப்புறங்களில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்கஒலிபெருக்கிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 25 ம் தேதி வரை பிளஸ்2 அரசு பொது தேர்வு நடக்கிறது. அதனை தொடர்ந்து பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அரசு பொது தேர்வு நடைபெற உள்ளது.
அடுத்த 2 மாதங்களுக்கு மாணவ, மாணவிகள் படிப்பில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இச்சூழலில் கிராமப்புறங்களில் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் அம்மன் கோயில்களில் திருவிழா, தேரோட்டம் நடைபெற உள்ளது. இத்திருவிழா காலங்களில் கோயில்களில் ஒலி பெருக்கிகள் அமைத்து பாடல்கள் ஒலிபரப்பப்படும். இது தவிர தெருக்களில் பலரும் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வீதி உலா வருவார்கள். இக்கால கட்டத்தில் ஒலி பெருக்கிகளால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும்.
இதனால் மாணவர்கள் தேர்வுக்கு படிக்க முடியாத சூழல் ஏற்படும். எனவே தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்காத வகையில், ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என மாணவர், பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.