/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெருக்கடியில் அங்கன்வாடி குழந்தைகள் கிடப்பில் புதிய கட்டடம்
/
நெருக்கடியில் அங்கன்வாடி குழந்தைகள் கிடப்பில் புதிய கட்டடம்
நெருக்கடியில் அங்கன்வாடி குழந்தைகள் கிடப்பில் புதிய கட்டடம்
நெருக்கடியில் அங்கன்வாடி குழந்தைகள் கிடப்பில் புதிய கட்டடம்
ADDED : பிப் 28, 2025 06:53 AM

திருப்புத்துார்,: திருப்புத்துார் தம்பிபட்டியில் அங்கன்வாடி மையம் உள்ளது. 2019ல் இந்த அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் இதுவரை புதிய கட்டடம் கட்டப்படவில்லை. தற்போது இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான 30க்கும் அதிகமான குழந்தைகள் வருகின்றனர். ஒரு சிறிய ஓட்டுக் கொட்டகையில் இயங்குகிறது.
இடப்பற்றாக்குறையால் 2 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளை மதியம் வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர். 4 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் மட்டும் நெருக்கமாக ஓய்வெடுத்து செல்கின்றனர்.
அந்த அறையில் தான் சமையல் பொருட்கள் வைக்கும் அறையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் குழந்தைகள் சிரமத்திற்குள்ளாவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
பேரூராட்சி கவுன்சிலர் சீனிவாசன் கூறுகையில், பேரூராட்சி எல்லைக்குள் உள்ளதால் கட்டடம் யார் கட்டுவது என்ற பிரச்னை உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை கோரியும் நடவடிக்கை இல்லை. வேறிடத்திற்கு மாற்றினால் இப்பகுதி குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். தற்காலிகமாக இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நாடக மேடையை பயன்படுத்த கூறியுள்ளோம்.' என்றார்
தம்பிபட்டி சத்யா கூறுகையில், இங்கு ஒரு முறை ஓடு உடைந்து விழுந்து விட்டது. பாம்பு கூட இரு முறை வந்து விட்டது.
பாதுகாப்பில்லாமல் உள்ளது. குழந்தைகளை அனுப்ப பயமாக உள்ளது. கலெக்டர் நேரில் பார்த்தும் இதுவரை புதுக்கட்டடம் கட்டவில்லை. மற்ற அங்கன்வாடி போல இடவசதியுடன் கட்டிடம் கட்டித்தரவேண்டும்' என்றார்.