/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைக்கிராமத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட்
/
சாலைக்கிராமத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட்
ADDED : மார் 04, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைக்கிராமம்: சாலைக்கிராமத்தில் ரூ.1.36 கோடி செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கான பூமி பூஜை விழா மாவட்ட கலெக்டர் அஜித் தலைமையில் நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் வானதி,எம்.எல்.ஏ., தமிழரசி, தாசில்தார் முருகன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பி.டி.ஓ.,க்கள் விஜயகுமார், முத்துக்குமரன் நன்றி கூறினர்.