/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் தொடர் கொள்ளை இரவு போலீஸ் ரோந்து அவசியம்
/
சிவகங்கையில் தொடர் கொள்ளை இரவு போலீஸ் ரோந்து அவசியம்
சிவகங்கையில் தொடர் கொள்ளை இரவு போலீஸ் ரோந்து அவசியம்
சிவகங்கையில் தொடர் கொள்ளை இரவு போலீஸ் ரோந்து அவசியம்
ADDED : மே 24, 2024 02:28 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி அதிகம் நடந்துள்ளது. .
சிவகங்கை மாவட்டத்தில் மே 19 இரவு ஒரே நேரத்தில் இரண்டு வங்கியில் கொள்ளை முயற்சி, ஒரு வீட்டில் திருட்டு ,ஒரு இளைஞன் படுகொலை என்ற நிகழ்வு தொடர்ச்சியாக சிவகங்கையில் நடந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காரைக்குடியில் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக உள்ள வெங்கடாசலம் என்பவரிடம் அவர் பேருந்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற போது டூவீலரில் வந்த 6 பேர் வெங்கடாசலம் வைத்திருந்த ரூ.1.50 லட்சம், 2 மடிக்கணினிகளை பறித்து தப்பினர்.
நேற்று காலை சென்னையில் இருந்து பஸ்சில் வந்த நகை வியாபாரிடம் 75 பவுன் தங்க நகை மற்றும் 5 கிலோ வெள்ளிக்கட்டிகளை பைக்கில் வந்த நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். மாவட்ட எஸ்.பி., போலீசாரின் இரவு நேர ரோந்து பணிகளை முடுக்கிவிட வேண்டும். வழிப்பறி, தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.