/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி விண்ணப்பிக்க நவ.30 கடைசி நாள்
/
திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி விண்ணப்பிக்க நவ.30 கடைசி நாள்
திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி விண்ணப்பிக்க நவ.30 கடைசி நாள்
திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி விண்ணப்பிக்க நவ.30 கடைசி நாள்
ADDED : செப் 06, 2024 05:02 AM

சிவகங்கை: மாவட்ட அளவில் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவர்கள் அறிந்து கொண்டு, கல்வி அறிவுடன் நல் ஒழுக்கத்தை கற்க வேண்டும் என்ற நோக்கில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,000 பரிசு தொகை, சான்றுடன் வழங்கப்படும். வரும் கல்வி ஆண்டில் (2024- -2025) மாவட்ட அளவில் அரசு, தனியார், மெட்ரிக், நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
பங்கு பெறும் மாணவர்கள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புக்கள், சிறப்பு பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக எடுக்கப்படும்.
இதற்கான விண்ணப்பத்தை www.tamilvalarchithurai.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாணவ, மாணவிகள் நவ.,30 ம் தேதிக்குள், உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், சிவகங்கையில் ஒப்படைக்க வேண்டும்.