/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சத்துணவு ஊழியர் சந்திப்பு இயக்கம்
/
சத்துணவு ஊழியர் சந்திப்பு இயக்கம்
ADDED : ஆக 31, 2024 06:21 AM
சிவகங்கை : சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை சம்பளம், பென்ஷன் வழங்க கோரி சிவகங்கையில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சத்துணவு ஊழியர்கள் சந்திப்பு இயக்க கூட்டம் நடத்தினர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த சந்திப்பு இயக்கத்திற்கு, அனைத்து ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி தலைமை வகித்தார்.
மாவட்ட நிதி காப்பாளர் நடராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லதா, மாவட்ட பொருளாளர் கற்பகவல்லி, மாவட்ட தலைவர் பாண்டி, மாவட்ட இணை செயலாளர் கோமதி, மாவட்ட துணை தலைவர் ஜெயபாரதி, மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மாரி, மாநில செயற்குழு கலாராணி, மணிமுரசு, செல்வி உள்ளிட்டோர் 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஊழியர்களை சந்தித்து கோரிக்கைகளை விளக்கி கூட்டம் நடத்தினர்.