/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய மாநாடு
/
சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய மாநாடு
ADDED : மார் 09, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க சிவகங்கை ஒன்றிய மாநாடு நடந்தது.
கிளைத் தலைவர் ரமணி தலைமை வகித்தார். சசிகலா வரவேற்றார். ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி தொடங்கி வைத்தார். செயலாளர் பூப்பாண்டி அம்மாள் அறிக்கை வாசித்தார்.
பொருளாளர் பிரபா வரவு செலவு அறிக்கை வாசித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டி, செயலாளர் லதா கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். தலைவராக பூப்பாண்டியம்மாள், செயலாளர் செல்வராணி, பொருளாளர் பிரபா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.