/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் தயக்கம் நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்
/
ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் தயக்கம் நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்
ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் தயக்கம் நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்
ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் தயக்கம் நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்
ADDED : செப் 06, 2024 04:59 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பாதசாரிகள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்புவனம் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சாலையின் இருபுறமும் 500க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் தினசரி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க திருப்புவனம் வந்து செல்கின்றனர். ரோட்டை ஒட்டிய கடைகளில் பொதுமக்கள் பார்வையில் படும்படியாக பொருட்களை ரோட்டிலேயே வைத்துள்ளனர்.
கடை உரிமையாளர்கள், பொருட்கள் வாங்க வருபவர்கள் என பலரும் ரோட்டிலேயே டூவீலர்களை நிறுத்துகின்றனர்.
திருப்புவனம் புதுாரில் தொடங்கி நான்கு வழிச்சாலை பைபாஸ் ரோடு வரை இருபக்கமும் ஆக்கிரமிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை ஏழு மீட்டர் அகலம் கொண்டதாக இருக்க வேண்டும், ஆனால் திருப்புவனம் நகர்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இரண்டரை மீட்டர் அளவிலேயே உள்ளது. வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை மற்றும் பேரூராட்சி இணைந்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், மற்ற துறைகள் தயாராக இருந்தும் வருவாய்த்துறை தயக்கம் காட்டுவதால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவே இல்லை.
திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஒட்டிகள் தவிப்பதுடன் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வர வேண்டும்.