/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் ரயில்வே கேட் மூடலால்... கடும் பாதிப்பு போலீசுக்கு தெரிவித்ததாக கூறும் அதிகாரிகள்
/
திருப்புவனத்தில் ரயில்வே கேட் மூடலால்... கடும் பாதிப்பு போலீசுக்கு தெரிவித்ததாக கூறும் அதிகாரிகள்
திருப்புவனத்தில் ரயில்வே கேட் மூடலால்... கடும் பாதிப்பு போலீசுக்கு தெரிவித்ததாக கூறும் அதிகாரிகள்
திருப்புவனத்தில் ரயில்வே கேட் மூடலால்... கடும் பாதிப்பு போலீசுக்கு தெரிவித்ததாக கூறும் அதிகாரிகள்
ADDED : மார் 25, 2024 06:54 AM

திருப்புவனம், : திருப்புவனத்தில் முன்னறிவிப்பின்றி நரிக்குடி ரோடு ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதால் பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகினர்.
திருப்புவனத்தில் இருந்து அல்லிநகரம்,மேலராங்கியம், நாங்கூர், நரிக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பாதையில் மின்மயமாக்கப்பட்ட மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதை குறுக்கிடுகிறது. இந்த இடத்தில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டு ரயில் வரும் போது கேட் அடைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படும். நாள் ஒன்றுக்கு பயணிகள் ரயிலுக்காக ஆறு முறை திறந்து மூடப்படும், இதுதவிர சரக்கு ரயில்கள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவற்றிற்காகவும் கேட் திறந்து மூடப்படுகிறது. ரயில்வே கேட் பகுதியில் நேற்று காலை எட்டு மணி முதல் திடீரென பராமரிப்பு பணி என கூறி கேட் மூடப்பட்டது. பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்பு எதுவுமின்றி கேட் மூடப்பட்டதால் பலரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
கேட் மூடப்பட்டதால் வாகனங்கள் அனைத்தும் நான்கு வழிச்சாலையை சுற்றி திருப்புவனம் வந்து சென்றன. நேற்று பா.ஜ., பிரசாரம் வேறு நடந்ததால் வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை இன்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்: ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணி என முன்னதாகவே போலீசாருக்கும், போக்குவரத்து கழக கிளை பணிமனைக்கும் தகவல் தெரிவித்து விட்டோம். மதியம் ஒரு மணிக்கு பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது, என்றனர்.
மதுரையில் இருந்து வரும் அரசு பஸ்கள் திருப்புவனம் வந்து மீண்டும் திரும்பி பைபாஸ் ரோடு சென்று நரிக்குடி பாதையில் சென்றது. பல முறை ரயில்வே நிர்வாகம் முன்னறிவிப்பின்றி கேட் அருகே பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது.
பொதுமக்களுக்கு எந்த வித அறிவிப்பும் செய்வதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ரயில்வே நிர்வாகத்திடம் முன்னறிவிப்பின்றி பணிகளை மேற்கொள்ள கூடாது என அறிவுறுத்த வேண்டும், என்றனர்.

