/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெடுமரம் மஞ்சுவிரட்டில் ஒருவர் பலி; 12 பேர் காயம்
/
நெடுமரம் மஞ்சுவிரட்டில் ஒருவர் பலி; 12 பேர் காயம்
ADDED : மார் 30, 2024 04:51 AM

திருப்புத்துார், : திருப்புத்துார் அருகே நெடுமரத்தில் அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டில் மாடுமுட்டியதில் ஒருவர் பலியானார். 12 பேர் காயமடைந்தனர். அனுமதியின்றி நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவானது.
நெடுமரம் மலையரசி அம்மன், மங்கச்சி அம்மன் கோவில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெறும். தேர்தல் என்பதால் மஞ்சுவிரட்டிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தொழுவிலிருந்து 90க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. தொழுவிற்கு வெளியே கட்டுமாடுகளாக 500 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப் பட்டன. இதில் காளைகள் முட்டியதில் பலர் காயமடைந்தனர்.
அதில் 12 பேர் திருப்புத்துார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
வேடிக்கை பார்க்க வந்த கொட்டாம்பட்டி, சுக்காம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் குமார வேலுவை மாடு கழுத்தில் குத்தியதில் இறந்தார். அனுமதி இல்லாமல் நடந்த மஞ்சுவிரட்டு குறித்து வி.ஏ.ஒ., போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

