/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
‛'ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டம் 20 சதவீத மகசூல் உயர்த்த முடிவு
/
‛'ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டம் 20 சதவீத மகசூல் உயர்த்த முடிவு
‛'ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டம் 20 சதவீத மகசூல் உயர்த்த முடிவு
‛'ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டம் 20 சதவீத மகசூல் உயர்த்த முடிவு
ADDED : மே 03, 2024 05:33 AM
சிவகங்கை,: சிவகங்கை மாவட்டத்தில் 15 முதல் 20 சதவீத மகசூலை அதிகரிக்க 'ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் தலா ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அக்கிராமத்தில் அதிகளவில் விளையும் பயிர்களை ரோட்டோரத்தில் உள்ள வயல்களில் 10 முதல் 15 ஏக்கர் வரை நிலத்தை தேர்வு செய்து, வேளாண் தொழில் நுட்பங்களை வழங்கி, அங்கு ஒரே பயிரை 15 முதல் 20 சதவீதம் வரை மகசூலை அதிகரிக்க செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
இதற்காக மண் ஆய்வு, உழவு விதைகள், நீர், உர மேலாண்மை, தொழில்நுட்ப விதைப்பு முதல் விளைச்சல் களத்திற்கு செல்லும் வரை பயிர் மகசூலை அதிகரிக்க செய்வதாகும்.
வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் கூறியதாவது:
ஒரே கிராமம் ஒரே பயிர் திட்டத்தில் பயிர் மகசூலை அதிகரிக்க செய்யும் நோக்கில், அறுவடையின் போது விவசாயிகளை பங்கு பெற செய்து வயல் விழா நடத்தி, ஒட்டு மொத்த கிராமத்தில் பயிர் மகசூலை அதிகரிக்க செய்வதே நோக்கம் ஆகும். இதற்காக அனைத்து தொழில் நுட்பங்களும் பயன்படுத்தப்படும்.