/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஹிந்துவில் மட்டுமே உருவ, அருவ வழிபாடு
/
ஹிந்துவில் மட்டுமே உருவ, அருவ வழிபாடு
ADDED : செப் 09, 2024 07:33 AM
திருப்புத்தூர் : உருவம், அருவ வழிபாட்டை ஏற்கும் ஒரே சித்தாந்தம் இருப்பது ஹிந்துவில் மட்டும் தான் என திருப்புத்துாரில் பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராகிம் பேசினார்.
அவர் பேசியதாவது: ஹிந்து சமய எழுச்சி, ஒற்றுமைக்காக நடத்தும் ஊர்வலத்தில் முஸ்லிம் ஏன் வருகிறார் என்கின்றனர். கடவுள் நம்பிக்கையை எதிர்க்கிறவர்களுக்கு மட்டுமே இந்த சந்தேகம் வரும். உண்மையான ஹிந்துக்களுக்கு இந்த சந்தேகம் வராது. வழிபாட்டு முறைகள் தாம் வேறு. உலகில் உருவம், அருவத்தை வழிபடும் சித்தாந்தம் உள்ள மதம் ஹிந்து மட்டுமே.
அதற்காக தான் இஸ்லாமியை வழிபாடு செய்பவர்களை ஹிந்து சமய ஒற்றுமைக்கு அழைக்கின்றனர். அரபு, ஐரோப்பிய கலாச்சாரத்தை கொண்டு வருபவர்கள் தான் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். மண்ணின் பண்பாடு, கலாச்சாரத்தை ஏற்று வாழும் எந்த கிறிஸ்தவ, முஸ்லிம்களும் பிளவை ஏற்படுத்த விரும்ப மாட்டார்கள். இந்த உண்மையை புரிந்து கொண்டால், நமக்குள் பிளவு, பிரச்னை வராது, என்றார்.