ADDED : ஆக 12, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி : மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கீழடி விலக்கில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ., தமிழரசி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஐந்து லட்ச ரூபாய் செலவில் செட்டி நாடு கட்டட கலை பாணியில் பஸ் ஸ்டாப் கட்டப்பட்டது. எம்.எல்.ஏ., தமிழரசி திறந்து வைத்தார்.
விழாவில் கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன், திருப்புவனம் யூனியன் சேர்மன் சின்னையா, திருப்புவனம்பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

