/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பறக்கும் படையுடன் இணைந்து வெளி மாநில போலீஸ் சோதனை
/
பறக்கும் படையுடன் இணைந்து வெளி மாநில போலீஸ் சோதனை
ADDED : ஏப் 12, 2024 10:45 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பறக்கும் படையினருடன் இணைந்து வெளிமாநில போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்.19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.பல்வேறு நடத்தை விதிகள் இருந்தாலும் வாகன சோதனையில் தேர்தல் கமிஷன் தீவிர கவனம் செலுத்திவருகிறது.
வாகனங்கள் மூலமாக பணம், பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டு பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செக் போஸ்ட்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் 13 செக் போஸ்ட்கள் உள்ளன. கூடுதல் பாதுகாப்பு பணிக்கு நாகாலாந்து ஆயுதப்படை போலீஸ், திருச்சி பட்டாலியன் போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் என மொத்தம் 357 போலீசார் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
2 உதவி கமிஷனர் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களும் வருகை தந்துள்ளனர். இவர்கள் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார் எம்.எல்.ஏ., தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது வெளி மாநில, வெளி மாவட்ட பாதுகாப்பு படையும் அவர்களுடன் இணைந்துள்ளது.

