/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
லோடுமேன் பற்றாக்குறையால் நெல் மூடை தேக்கம்
/
லோடுமேன் பற்றாக்குறையால் நெல் மூடை தேக்கம்
ADDED : மார் 15, 2025 05:28 AM
மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல் மூடைகளை கோடவுன்களில் இறக்குவதற்கு லோடுமேன்கள் பற்றாக்குறையாக உள்ளதால் நெல்மூடைகள் தேக்கமடைவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மானாமதுரை அருகே கட்டிக்குளம், முத்தனேந்தல்,இடைக்காட்டூர்,சன்னதி புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் மூடைகளை மானாமதுரை சிப்காட் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கோடவுனில் இறக்கி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் நெல்மூடைகளை கையாள்வதற்கு போதிய லோடுமேன்கள் இல்லாத காரணத்தினால் லாரிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்மூடைகளை கொண்டு செல்ல தாமதம் ஏற்படுவதால் நெல்மூடைகள் அதிகளவில் தேக்கமடைந்துள்ளன. கட்டிக்குளம், முத்தனேந்தல் உள்ளிட்ட ஊர்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் மழை நீரில் நனைந்து சேதமானதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது: லோடுமேன்கள் பற்றாக்குறை சரி செய்யப்பட்டு மூடைகளை இறக்கும் பணி த நடைபெற்று வருகிறது தேக்கமடைந்த மூடைகள் விரைவில் கொள்முதல் செய்யப்படும் என்றனர்.