/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாணவர்களின் ஆசையை நிறைவேற்றதொடக்கப்பள்ளிக்கு ரயில் போன்ற வர்ணம்
/
மாணவர்களின் ஆசையை நிறைவேற்றதொடக்கப்பள்ளிக்கு ரயில் போன்ற வர்ணம்
மாணவர்களின் ஆசையை நிறைவேற்றதொடக்கப்பள்ளிக்கு ரயில் போன்ற வர்ணம்
மாணவர்களின் ஆசையை நிறைவேற்றதொடக்கப்பள்ளிக்கு ரயில் போன்ற வர்ணம்
ADDED : ஜூலை 09, 2024 05:14 AM

சிவகங்கை: மறவமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் ரயிலில் பயணம் ஆசையை நிறைவேற்றவும் மாணவர்களை கவரவும் பள்ளி வகுப்பறை கட்டடத்தை ரயில் பெட்டி போன்ற தோற்றத்தில் வண்ணம் தீட்டியுள்ளனர்.
காளையார்கோவில் அருகேயுள்ளது மறவமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் மறவமங்கலம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 116 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் நான்கு வகுப்பறை கட்டடங்கள் உள்ளது.
இந்த பள்ளி கட்டடங்களை மராமத்து செய்ய கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஊரகவளர்ச்சித்துறை சார்பில் பள்ளி அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.10 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் பள்ளி கட்டடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. மாணவர்களை கவரும் வகையில் கட்டடங்களை சீரமைத்து வண்ணம் தீட்டினர்.
இதில் 5ஆம் வகுப்பு வகுப்பறை கட்டடத்தில் ரயில் பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டு வர்ணம் தீட்டியுள்ளனர். வகுப்பறையின் கதவுகள், ஜன்னல் அனைத்தும் நிஜ ரயிலை போன்றே உள்ளது. மறவமங்கலம் எக்ஸ்பிரஸ் ரயில் என முன் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
வகுப்பறை உள் பகுதிகளில் திருவள்ளுவர், பழமொழிகள், திருக்குறள், சித்த மருத்துவ பயன்கள், பொதுஅறிவு தகவல்கள், தமிழ் ஆங்கில மாதங்கள், தேசிய மாநில விலங்கு, ஐந்து வகை நிலங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்த கட்டடத்திற்குள் உள்ளே சென்று தற்போது நிஜ ரயிலில் உட்கார்ந்து பாடம் படிப்பது போன்று உணர்வதாக தெரிவிக்கின்றனர்.