sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தைலமரங்கள் நடப்படும் காடுகள்: காப்புக் காடுகளாக மாற்ற கோரிக்கை

/

தைலமரங்கள் நடப்படும் காடுகள்: காப்புக் காடுகளாக மாற்ற கோரிக்கை

தைலமரங்கள் நடப்படும் காடுகள்: காப்புக் காடுகளாக மாற்ற கோரிக்கை

தைலமரங்கள் நடப்படும் காடுகள்: காப்புக் காடுகளாக மாற்ற கோரிக்கை


ADDED : ஜூன் 11, 2024 07:30 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வன உயிரினங்களை பாதுகாக்க காப்புக்காடுகளை வனத்தோட்டக்கழகத்திடமிருந்து திரும்ப பெற்று இயற்கையான வனங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் வன உயிரினங்களில் முதன்மையாக உள்ளது புள்ளிமான்கள். 25 ஆண்டுகளுக்கு முன் ஏராளமான மான்கள் இருந்தன. தற்போது வேட்டையாடுதல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாலும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதாலும் புள்ளிமான்கள் எண்ணிக்கை பல ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மாவட்டத்தில் பரவலாக குறுங்காடுகளே உள்ளன. மான்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கேற்ப காடுகளின் பரப்பு அதிகரிக்கவில்லை

தற்போது மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 4.18 லட்சம் எக்டேரில் வனப்பரப்பு 16.5 ஆயிரம் எக்டேர் மட்டுமே. அதில் காப்புக்காடுகளில் நல்ல நீர்வளம் உள்ள 35 ஆயிரம் ஏக்கரில் இயற்கையான காடுகளே இல்லை. அந்த வனப்பரப்பு தமிழ்நாடு வனக்கழகத்திற்கு குத்தகை விடப்பட்டுள்ளது.

அதில் யூகலிப்ட்ஸ், முந்திரி மரங்கள் வளர்க்கப்பட்டு, சில ஆண்டுகளில் வெட்டப்பட்டு, மீண்டும்நடப்படுகிறது. இதனால் தொடர்ந்து தொழிலாளர்கள் நடமாட்டம் அப்பகுதியில் நிலவுவதும், இயற்கையாக வளரும்செடிகள் அகற்றப்படுவதும் தொடர்கிறது.

அப்பகுதியில் புற்கள், குறுஞ்செடிகள் வளர்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. மேலும் மழைநீர் புரண்டோடும் சிறு ஓடைகளும் அழிந்து நிலத்தடி நீர் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் இந்த மரங்கள் நடவிற்கு முன்பாக வசித்த நரி, தேவாங்கு, மரநாய், ஓநாய், காட்டுப்பூனை உள்ளிட்டவை அழிந்து விட்டன. தற்போது அதில் அரிதாக மான்கள் மட்டும் பெருகி வருகின்றன. அதற்கேற்ப அதன் வாழிடம் இல்லை.

இதனால் நீர் மற்றும் தீவனப்பற்றாக்குறையால் வேறு இடங்களுக்கு செல்லும் போது குடியிருப்பு, தனியார் தோட்டங்களில் நாய்களால் கடிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன. வேலிகளில் சிக்கியும் காயமடைகின்றன.

வன உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ நிரந்தர நடவடிக்கையாக காப்புக்காடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். மான்களைக் காப்பாற்ற காப்புக்காடுகளை மான்கள் உள்ளிட்ட வன உயிரினங்களின் வாழிடமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது காப்புக்காடுகளில் வனத் தோட்ட கழகத்தின் குத்தகையை ரத்து செய்து இயற்கையான தாவரங்கள் வளரும் இடமாக மாற்ற வேண்டும்.

இல்லாவிட்டால் சிவகங்கை மாவட்டத்தின் வன உயிரினங்கள் பாதிக்கப்படுவதுடன், வனப்பரப்பு வெறும் வரைபடத்தில் மட்டும் இருக்கும். மாவட்டத்தின் இயற்கை சமச்சீர் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்ற வன உயிரின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us