ADDED : ஆக 05, 2024 07:07 AM
சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து பென்ஷனர்கள் சங்க பேரவை கூட்டம் நடந்தது.ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறையில் ஓய்வு பெறவிருக்கும் அலுவலர்கள் மீதான தணிக்கை தடைகளை நீக்க வேண்டும்.
ஓய்வூதியர்கள் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். வருங்கால வைப்பு தொகைக்கான வட்டியினை ஓய்வு பெறும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என தீர்மானித்தனர். கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்தழகு தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் ஜான்செல்வராஜ்,மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் ராமசாமி, செல்லமுத்து, ராதாகிருஷ்ணன் பேசினர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக முத்தழகு, மாவட்ட செயலாளர் உதயசங்கர், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், மாநில செயற்குழு அன்புத்துரை, துணை தலைவர்கள் வீரையா, காந்தி, லட்சுமணன், மாதவன், இணை செயலாளர்களாக புவனேஸ்வரன், உமா, தங்கராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.