ADDED : ஆக 19, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : இடையமேலுாரில் ரூ.26 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சிவதாசு வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், ஒன்றிய கவுன்சிலர் கருப்பணன், பி.டி.ஓ., செழியன் பங்கேற்றனர்.
கலெக்டர் பேசியதாவது: இடையமேலுார் ஊராட்சியில் 2021- 2022ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.13.21 கோடி மதிப்பில் 505 வளர்ச்சி பணிகள் நடத்தப்பட்டுள்ளன. 22 ஏக்கரில் பசுமை வளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி வளர்ச்சிக்கு மாவட்ட நிர்வாகமும், அரசும் உறுதுணை புரிகிறது, என்றார்.

