/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான சம்பளம் கோரி ஊராட்சி செயலர்கள் போராட முடிவு
/
பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான சம்பளம் கோரி ஊராட்சி செயலர்கள் போராட முடிவு
பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான சம்பளம் கோரி ஊராட்சி செயலர்கள் போராட முடிவு
பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான சம்பளம் கோரி ஊராட்சி செயலர்கள் போராட முடிவு
ADDED : மார் 04, 2025 06:11 AM

சிவகங்கை: ''ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான காலமுறை சம்பளம் போன்ற சலுகைகளை வழங்க வலியுறுத்தி மார்ச், ஏப்ரலில் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாநில தலைவர் ஏ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு 2006 முதல் காலமுறை சம்பளம் வழங்கப்படுகிறது. அதே போன்று சிறப்பு ஓய்வூதியமாக மாதம் ரூ.2,000 அறிவித்து, ஒட்டு மொத்த தொகையாக ரூ.ஒரு லட்சம் வரை வழங்குகின்றனர்.
அரசு ஊதியக்குழு பரிந்துரைப்படி 2018 முதல் சம்பளம் பெற்று வருகிறோம். அதே நேரம் தமிழக அரசின் ஊதியக்குழு பரிந்துரைபடி சம்பளமும், அகவிலைப்படி, மருத்துவம், வீட்டு வாடகைபடி பெற்று வந்தாலும், பணிசார்ந்த உரிமை மற்றும் சலுகைகள் ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்படவில்லை.
ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பதிவுறு எழுத்தர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் நிலையில் உள்ள அலுவலக உதவியாளர்கள் கூட அலுவலகம் சார்ந்த பணிகளை மட்டுமே செய்கின்றனர்.
கிராம ஊராட்சி செயலர்கள் அலுவலக பணி மட்டுமின்றி, களப்பணியும் செய்கின்றனர். ஊராட்சி செயலர் பணியிடத்திற்கான சம்பள விகிதத்திற்கு குறைவான சம்பள விகிதம் பெறும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர்களுக்கு வழங்கப்படும் பணி சார்ந்த சலுகைகள் கூட ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்படவில்லை. முறையான காலமுறை சம்பளம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் பதிவுறு எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை எங்களுக்கும் வழங்குவதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும்.
மார்ச், ஏப்ரலில் தொடர் போராட்டம்
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 12ல் மாநில அளவில் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும். ஏப்., 4 சென்னை ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும். ஏப்., 21 சென்னை ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.