/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்
/
ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 28, 2024 07:30 AM
சிவகங்கை, : சிவகங்கையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். வட்டக்கிளை தலைவர் பாலாஜி வரவேற்றார்.
செயலாளர் அப்துல் ஜப்பார், பொருளாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் லட்சுமண ராஜூ, பி.டி.ஓ., பாலசுப்பிரமணியன், மாநில பொது செயலாளர் முத்துக்குமார், மாநில பொருளாளர் செல்லப்பாண்டி, மாநில இணை செயலாளர் அரள்பிரகாசம் பேசினர். மாவட்ட அமைப்பு செயலாளர் அருள்பிரகாசம் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
மாவட்ட செயற்குழு மீனாட்சி நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்வில் வட்டக்கிளை தலைவராக பாலாஜி, மாவட்ட செயற்குழு சுரேஷ், மீனாட்சி தேர்வாகினர். ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் பல ஆண்டாக ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.