/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளிகோயிலில் மார்ச் 9ல் பங்குனி சுவாதி விழா கொடியேற்றம் மார்ச் 17 ல் தேரோட்டம்
/
அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளிகோயிலில் மார்ச் 9ல் பங்குனி சுவாதி விழா கொடியேற்றம் மார்ச் 17 ல் தேரோட்டம்
அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளிகோயிலில் மார்ச் 9ல் பங்குனி சுவாதி விழா கொடியேற்றம் மார்ச் 17 ல் தேரோட்டம்
அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளிகோயிலில் மார்ச் 9ல் பங்குனி சுவாதி விழா கொடியேற்றம் மார்ச் 17 ல் தேரோட்டம்
ADDED : பிப் 26, 2025 07:00 AM
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் 1434ம் பசலிக்கான பங்குனி சுவாதி திருவிழா மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் மார்ச் 8 அன்று காலை 6:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் பங்குனி சுவாதி விழா பூஜை துவங்குகிறது.
மார்ச் 9 அன்று காலை 9:15 முதல் 10:15க்குள் கொடிமரத்தில் கொடியேற்றி திருவிழா துவங்குகிறது. அன்று இரவு கேடக வாகனத்தில் சுவாமி வீதி உலா வருவார்.
பங்குனி திருவிழாவை முன்னிட்டு தினமும் வெட்டுடையார் காளியம்மன் மார்ச் 10 ம் தேதி காலை கேடக வாகனத்தில் வீதி உலா வருவார். அன்று காலை 10:00 மணிக்கு சன்னதியில் 108 சங்காபிேஷகம் நடைபெறும்.
இரவு அம்மன் பூதகி வாகனத்தில் வீதி உலா வருவார். மார்ச் 11 அன்று காலை 10:30 மணிக்கு தேருக்கு முகூர்த்தக்கால் நடுதல், அதை தொடர்ந்து கேடக வாகன புறப்பாடு, இரவு அம்மன் கிளி வாகனத்தில் வீதி உலா வருகிறார்.
மார்ச் 12 ம் தேதி காலை கேடக வாகனத்திலும், இரவு அன்ன வாகனம், மார்ச் 13 ம் தேதி காலை கேடக வாகனம், இரவு காமதேனு வாகனத்தில் வீதி உலா வருகிறார்.
மார்ச் 14 ம் தேதி காலை கேடக வாகனம், இரவு ரிஷப வாகனம், மார்ச் 15ல் காலை கேடக வாகனம், இரவு சிம்ம வாகனத்தில் வீதி உலா வருவார்.
மார்ச் 16 அன்று காலை கேடக வாகன புறப்பாடு, காலை 8:15 மணிக்கு தேருக்கு கும்பம் சாத்துதல், இரவு 7:00 மணிக்கு அம்மன் தங்கரதத்தில் புறப்பாடு, இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
மார்ச் 17 பங்குனி தேரோட்டம்
மார்ச் 17 அன்று அதிகாலை 5:15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள்வார்.
அன்று காலை 9:15 மணி முதல் 10:15க்குள் பங்குனி தேரோட்டம் நடைபெறும்.
மார்ச் 18 ல் காலை 10:30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், அதனை தொடர்ந்து சந்தனக்குடம், பால்குடம் உற்சவம் நடைபெறும். இரவு அம்மன் பூப்பல்லக்கில் வலம் வருவார்.
மார்ச் 19 அன்று காலை 9:15 மணிக்கு விடையாற்றி வெள்ளி ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இரவு தங்க ரத புறப்பாடுடன் பங்குனி திருவிழா நிறைவுபெறும்.