/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டுச்சாவடிகளில் முடங்கிய சக்கர நாற்காலி
/
ஓட்டுச்சாவடிகளில் முடங்கிய சக்கர நாற்காலி
ADDED : ஏப் 20, 2024 05:18 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஓட்டுச்சாவடிகளில் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும் அவற்றை இயக்க ஆட்கள் நியமிக்கப்படாததால் முதியோர், மாற்றுத் திறனாளிகள் அவதிப்பட்டனர்.
அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிகளை உள்ளே அழைத்துச் செல்ல சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிங்கம்புணரி டவுனில் அவை தயாராக வைக்கப்பட்டும் அவற்றை இயக்க ஆட்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை.
இதனால் அதை நம்பி வந்த பலரும் அவதிப்பட்டனர். உடன் வந்தவர்களுக்கு சக்கர நாற்காலியை இயக்கத் தெரியாததாலும் படிகளில் வைத்து தள்ள முடியாததாலும் சிரமப்பட்டனர்.
இது பற்றிய புகார் சென்றபின் மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சக்கர நாற்காலிகளை இயக்க ஆட்கள் நியமிக்கப்பட்டனர்.

