/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டூவீலர்களில் பறக்கும் சிறுவர்கள் பெற்றோர்கள் அலட்சியம்
/
டூவீலர்களில் பறக்கும் சிறுவர்கள் பெற்றோர்கள் அலட்சியம்
டூவீலர்களில் பறக்கும் சிறுவர்கள் பெற்றோர்கள் அலட்சியம்
டூவீலர்களில் பறக்கும் சிறுவர்கள் பெற்றோர்கள் அலட்சியம்
ADDED : மார் 03, 2025 07:12 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்தும் பெற்றோர்களின் அலட்சியம் காரணமாக சிறுவர், சிறுமியர்கள் டூவீலர்களில் அதி வேகத்தில் பறந்து வருகின்றனர்.
தமிழகத்தில் டூவீலர், கார் உள்ளிட்டவைகளை இயக்க குறைந்தபட்ச வயது 18 ஆகும், 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனங்களை இயக்க அனுமதியில்லை. மீறி வாகனங்களை இயக்கினால் வாகன ஓட்டுனர்கள் மட்டுமல்ல, வாகன உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனங்களை இயக்கி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்தால் இழப்பீடும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனாலும் திருப்புவனம் வட்டாரத்தில் சிறுவர், சிறுமியர்கள் பலரும் டூவீலர்களில் அதிவேகத்தில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பறக்கின்றனர். பெற்றோர்களும் கடைகளுக்கு சென்று வர, உறவினர்களை பஸ் ஸ்டாப் உள்ளிட்டவற்றில் இறக்கி விட சிறுவர், சிறுமியர்களிடம் டூவீலர்களை கொடுத்து அனுப்புகின்றனர். விடுமுறை நாட்களில் சிறுவர், சிறுமியர்கள் பலர் டூ வீலர்களில் அதிவேகத்தில் பறக்கின்றனர்.
மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ் உத்தரவின் படி 18 வயது பூர்த்தியடையாதவர்கள் டூவீலர்களை இயக்கினால் அவர்கள் மீதும், டூவீலர்கள் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதுவரை திருப்புவனம் வட்டாரத்தில் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் சிறுவர்கள் டூவீலர்கள் இயக்குவது குறையவே இல்லை.
போலீசார் கூறுகையில் : சிறுவர்கள் டூவீலர்களை இயக்கும் போது விரட்டி பிடிக்க முடியவில்லை. மீறி பிடிக்க முயன்று விபத்து ஏற்பட்டால் போலீசார் மீதுதான் குற்றம் சாட்டுகின்றனர். திருப்புவனம் அரசு மருத்துவமனை முன் பஸ்சை முந்த முயன்று டூவீலரில் வந்த சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்மனது வைத்தால்தான் தடுக்க முடியும், என்றனர்.