/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியர் இல்லாமல் குறைந்த மாணவர் எண்ணிக்கை மேலாண்மை; குழு அமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு

ADDED : ஆக 29, 2024 11:30 PM

எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே நிரந்தர ஆசிரியர் இல்லாதநிலையில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் பெற்றோர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இவ்வொன்றியத்தில்கட்டுக்குடிப்பட்டி ஊராட்சி கருங்குறிச்சிபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் (ஆங்கில வழி) 50 மாணவர்கள் வரை படித்தனர். சில வருடங்களாக இப்பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் இல்லாமல் வாரத்திற்கு ஒரு ஆசிரியர்வீதம் வேறு பள்ளியிலிருந்து மாற்றுப் பணியாக நியமிக்கப்பட்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.
மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படுவதாக கருதி பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்த்தனர். இதனால் மாணவர் எண்ணிக்கை 12 ஆனது.
இந்நிலையில் இப்பள்ளிக்கு மேலாண்மை குழு நிர்வாகிகளை தேர்வு செய்ய பெற்றோர்கள் மறுத்து விட்டனர். நிரந்தர ஆசிரியர் நியமித்தால் மட்டுமே பள்ளி மேலாண்மை குழு பதவியில் அமர்வோம் என அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்படவில்லை.
இந்த ஆண்டும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர். இதை தொடர்ந்து தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்க கல்வி) செந்தில் குமரன் நேற்று பள்ளிக்கு சென்று பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். விரைவில் நிரந்தர ஆசிரியர் நியமிக்கப்படும் என அவர் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து பள்ளி மேலாண்மைக் குழு அமைக்க பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சுமதி என்பவர் மேலாண்மை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவர், உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.