/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊர் பெயர் பலகை இல்லாததால் பயணிகள் குழப்பம்
/
ஊர் பெயர் பலகை இல்லாததால் பயணிகள் குழப்பம்
ADDED : மார் 31, 2024 11:34 PM

காரைக்குடி : காரைக்குடி-தேவகோட்டை ரஸ்தா பாலத்தில் ஊர் பெயர் பலகை, எச்சரிக்கை பலகை இல்லாததால் பயணிகள் குழப்பமடைகின்றனர்.
திருச்சி-ராமேஸ்வரம் வரையுள்ள 188 கி.மீ., தூரத்திற்கு இரு வழி சாலை அமைக்கும் பணி நடந்தது. தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது.
கடந்த ஏப்ரலில் பாலப்பணி முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் பாலத்தின் இருபுறமும் சப் வே அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி ராமேஸ்வரம் முக்கிய நெடுஞ்சாலை இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
புதிய பாலத்தின் இருபுறங்களும் பெயர் பலகையோ அல்லது எச்சரிக்கை பலகையோ வைக்கப்படவில்லை.
காரைக்குடி உட்பட அந்தந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் குழப்பமடைகின்றனர். தவிர பாலத்தின் முன்பு எவ்வித எச்சரிக்கை பலகைகளோ தடுப்புகளோ இல்லாததால், நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சப் வேயில் வரும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
எனவே தேவகோட்டை ரஸ்தா மேம்பாலத்தின் இருபுறமும் ஊர் பெயர் பலகைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

