/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தனியார் பஸ்சில் அவமதிப்பு முற்றுகையிட்ட பயணிகள்
/
தனியார் பஸ்சில் அவமதிப்பு முற்றுகையிட்ட பயணிகள்
ADDED : மார் 11, 2025 04:59 AM
திருப்புத்துார்: மதுரை எம்.ஜி.ஆர்.பஸ் ஸ்டாண்டில் இருந்து இயங்கும் தனியார் பஸ்களில் திருப்புத்துார் பயணிகள் ஏற அனுமதி மறுப்பது தொடர்கதையாகி வருகிறது. நேற்றும் மறுக்கப்பட்டதால் பஸ்சை பயணிகள் முற்றுகையிட்டனர்.
நேற்று காலை மதுரை எம்.ஜி.ஆர்.பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்புத்துார் வழியாக தேவகோட்டை செல்லும் தனியார் பஸ்சில் திருப்புத்துார் பயணி நீதியன்70, ஏறி அமர்ந்துள்ளார்.
நடத்துனரிடம் திருப்புத்துார் செல்ல வேண்டும் என்று கூறியதை அடுத்து கடுஞ்சொற்களால் நடத்துனரால் அர்ச்சிக்கப்பட்டு நீதியனை கீழே இறங்க வைத்துள்ளார். கீழே இழங்கிய நீதியன் வேறு பஸ்சில் திருப்புத்துார் சென்றுள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்தவர்கள் திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் திரண்டனர். முதியவரை அவமதித்ததனியார் பஸ் வந்தவுடன் முற்றுகையிட்டனர். போலீசார் பயணிகளை சமாதானப்படுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துனரை எச்சரித்து அரை மணி நேரத்திற்கு பின் பஸ்சை செல்ல வைத்தனர்.
பிப்.22ல் இதே போன்ற சம்பவத்திற்கு பயணி புகார் கொடுத்துள்ள நிலையில் மீண்டும் பயணிகள் அவமதிப்பது தொடர்ந்துஉள்ளது திருப்புத்தூர் பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.